சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3379 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்கான பூஜை நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி பல்வேறு ேஹாமங்கள் நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜையை தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு பிரம்மசுத்தி ரக்சாபந்தனம், வேதிகா அர்ச்சனை, தீபாராதனை, மகா பூ ர்ணாஹூதி மற்றும் தீபாராதனையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு விமான கலசத்திற்கும், 9:45 மணக்கு பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரம்பரை அறங்காவலர் தில்லைநாயகம் மற்றும் துறிஞ்சிக்கொல்லை கிராம பொதுமக்கள் செய்தனர்.