உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் ஆக.26ல் சதுர்த்தி விழா

பிள்ளையார்பட்டியில் ஆக.26ல் சதுர்த்தி விழா

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா ஆக.26ல் துவங்குகிறது. இக்கோயிலில் விநாயகருக்கு 10 நாட்கள் சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஆக.27 காலை கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இரவில் மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வருவார். தினசரி இரவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இரண்டாம் திருநாள் துவங்கி, எட்டாம் திருநாள் வரை காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.,4ல் காலையில் விநாயகர் திருத்தேர் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். செப்.5 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில், அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், மதியம் முக்கூரணி மோதகம் படையலும்,இரவில் ஐம்பெரும் கடவுளர்கள் வாகனங்களில் திருவீதி வலம் வருதலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !