கிருஷ்ணஜெயந்தி விழாவில் கலைநிகழ்ச்சிகள்
ADDED :3376 days ago
பரமக்குடி: சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி விழாவில் கலைநிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டிகள் நடந்தது. தாளாளர் வாசன் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் காளீஸ்வரி வரவேற்றார். எல்.கே.ஜி., மாணவ, மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்தனர். அனைத்து வகுப்பு மாணவிகளுக்கான நடனப் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் உமா நன்றி கூறினார்.