செஞ்சி சிறுகடம்பூர் முருகன் கோவிலில் தீட்சை வழங்கும் விழா
ADDED :3376 days ago
செஞ்சி :செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு தீட்சை வழங்கும் விழா நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில், ஆவணி மாத குரு உபதேசிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, திருமுருகன் சுவாமி முன்னிலையில் சிறப்பு ஹோமம் நடந்தது. பிறகு, பள்ளி மாணவர்களுக்கு தீட்சை வழங்கினர். இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் செஞ்சி ராஜா, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் விஜயராஜ், பொருளாளர் பிரேமசாய் பாபா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் முருவம்மாள், அமைப்பு செயலாளர் பொன்னுசாமி, நிர்வாகிகள் சேகர், முத்து உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.