கள்ளக்குறிச்சி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :3376 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா நடந்தது. விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பாரதப் பிரசங்கம் நடந்தது. பின்னர், 13ம் தேதி மாலை, பெரியாண்டச்சி அம்மன், பத்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை கோமுகி நதிக்கரையிலிருந்து பால்குடம், அக்னிச்சட்டி ஏந்தி பக்தர்கள், கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், காளி கோட்டை இடித்தல், மயானசூறை விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4:00 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.