செல்லாண்டியம்மன் கோவில்: தனி நபர்கள் ஆக்கிரமிப்பு
ADDED :3376 days ago
கிருஷ்ணராயபுரம்: மாயனூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில், தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அப்பகுதியை சேர்ந்த ராமன் என்பவர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர் பஞ்சாயத்து உட்பட்ட பொதுபணித்துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து, சிலர் கட்டடங்கள் கட்டியுள்ளனர். இதனால், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.