கரூர் காமாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3376 days ago
கரூர்: கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 21ம் தேதி நடந்தது. கோவில் திருப்பணியை வாங்கப்பாளையம் கருப்பையா ஸ்தபதியார் செய்திருந்தார். விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், வி.கே.ஜி., கருப்பண்ணன், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கரூர் நண்பன் பைனான்ஸ் முருகேசன், தமிழ் டிரேடர்ஸ் நடராஜன், சக்தி நர்சிங் கல்லூரி முதன்மை நிர்வாகி அல்லி சிதம்பரம் மற்றும் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியை திருப்பணிகுழு ஒருங்கிணைப்பாளர் பெனிபிட் பண்ட் சிதம்பரம் செய்திருந்தார்.