குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் குருபூஜை விழா
காரைக்குடி: குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில், தேசிக பரமாசாரிய சுவாமிகளின் மகா குருபூஜை விழா குருமூர்த்த வழிபாடுடன் துவங்கியது. நுால் வெளியீட்டு விழாவுக்கு பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நுாலை வெளியிட்டு பேசியதாவது: அன்பே சிவம் என்ற கோட்பாடு அனைவருக்கும் பொருந்துவதாக அமையும். வாழ்க்கையில் முக்தி பெற பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும். நல்ல சிந்தனை, உதவி செய்யும் மனப்பாங்கை ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். மனிதன் சொத்து மட்டும் சேர்த்து வைத்தால் போதாது. மற்ற உயிர்களையும் நேசிக்க கற்று கொள்ள வேண்டும், என்றார். பிள்ளையார்பட்டி கோவிந்தானந்த சுவாமிகள், மக்கள் கல்வி நிலையத் தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர் அய்க்கண், சுந்தர ஆவுடையப்பன், டாக்டர் நம்பெருமாள்சாமி, நாச்சியார், தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன், குன்றக்குடி கல்வியியல் கல்லுாரி செயலாளர் மோகன் பங்கேற்றனர்.