உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பையனுார்: பையனுார், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. மாமல்லபுரம் அடுத்த பையனுாரில்,  200 ஆண்டுகள் பழமையான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில், பல ஆண்டுகளுக்கு முன் தேர் உற்சவம் நடைபெற்ற நிலையில், தேர் பழுதாகி  உற்சவம் தடைபட்டது. பக்தர்கள் நன்கொடை மூலம் கோவில் புனரமைக்கப்பட்டு, புதிய தேரும் உருவாக்கப்பட்டது. அடுத்த மாதம் தேர் உற்சவம்  நடைபெற உள்ளதால், புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பக்தர்கள், தேரை , வீதிகளில் வடம் பிடித்து சென் று, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !