உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் அலகுகுத்துதல் நிகழ்ச்சி

அம்மன் கோவிலில் அலகுகுத்துதல் நிகழ்ச்சி

பெ.நா.பாளையம்: பேளூரில், மாரியம்மன் கோவில் விழாவில், நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், நேர்த்திக்கடன் செலுத்தினர். வாழப்பாடி அருகே, பேளூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, 10 மணியளவில், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா வந்தார். 11 மணிக்கு, நூற்றுக்கணக்கான பெண்கள், கிடா வெட்டி, பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மதியம், 3 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், கோவிலில் இருந்து, பழையபஸ் ஸ்டாண்ட், மசூதி தெரு, தும்பல் சாலை வழியாக, கோவில் வரை ஊர்வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !