காளஹஸ்தி கோவிலில் கும்பாபிஷேக பணி
ADDED :3376 days ago
திருப்பதி: காளஹஸ்தி கோவிலில், இரண்டு கோடி ரூபாய் செலவில், மகா கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளன. இதுகுறித்து, கோவில் அறங் காவலர் குழு தலைவர் குருவய்யா நாயுடு கூறியதாவது: காளஹஸ்தி கோவிலில், 2017 பிப்., 8ல், மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. காஞ்சி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளன. இதற்காக அவர்கள் இருவரும், 12 நாட்கள் காளஹஸ்தியில் தங்க உள்ளனர். கும்பாபிஷேக பணிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.