பூலோகநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுடன் பெருமாள் வீதியுலா!
ADDED :3376 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் பஞ்சமூர்த்திகளுடன் பெருமாள் வீதியுலா நடந்தது. நெல்லிக்குப்பத்தில் பழமையான புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும் பெருமாளையும் தரிசிக்க முடியும் என்பது சிறப்பாகும். இக்÷ காவிலின் கும்பாபிஷேக 7ம் ஆண்டு பூர்த்தி விழா இன்று (26ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி காலை சிறப்பு யாகமும் 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. மாலையில் பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலி க்கின்றனர்.