தவழும் கண்ணன் அலங்காரத்தில் சீனிவாச பெருமாள்!
ADDED :3437 days ago
உடுமலை: உடுமலை பெரியகடைவீதி சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஜெயந்தி விழாவில், பெருமாள், தவழும் கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில் கடந்த, 26ம் தேதி முதல் ஜெயந்தி உற்சவ விழா நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், பாசுரங்கள் சேவை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இதில், நேற்றுமுன்தினம் தவழும் கண்ணன் அலங்காரத்திலும், நேற்று வெண்ணைதாழி கண்ணன் அலங்காரத்திலும் பெருமாள் அருள்பாலித்தார்.