லட்சுமி நரசிம்மர் கோவில் காணிக்கை தலை முடி ரூ.1.30 லட்சத்திற்கு ஏலம்
ADDED :3356 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை தோறும் வார வழிபாடு மற்றும் சித்திரை, புரட்டாசி மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தலைமுடி காணிக்கை, உண்டியல் பணம், எடைக்கு எடை தானியம் போன்றவற்றை செலுத்தி, வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். நேற்று இந்தாண்டிற்கான தலைமுடி ஏலம் விடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மனோகரன், செயல் அலுவலர் உமேஷ்குமார், கணக்காளர் திவாகரன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில், 1.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.