ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா துவக்கம்
ADDED :3347 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 326ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சென்னை பெருங்களத்துார் முன்னாள் பேராயர் மலையப்பா சின்னப்பா தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் பங்கு தந்தை தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை காலை 6.00 மணிக்கும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 11ம் தேதி காலை 8.00 மணிக்கு பெருவிழா திருப்பலியும், 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி–கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் பங்கேற்கிறார்.12ம் தேதி கொடியி றக்கதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.