உடுமலையில் விநாயகர் விற்பனை ஜோர்!
உடுமலை: உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிலை விற்பனை ஜோராக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 5ம் ÷ ததி நடக்கிறது. இதையொட்டி இவ்விழா களை கட்டி வருகிறது. உடுமலை பஸ் ஸ்டாண்ட் முன்பு பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து அங்கு விற்பனை செய்யும் சரோஜினி கூறியதாவது: இங்கு, கடந்த 10 ஆண்டுகளாக சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். அரை அடியில் 4 அடி வரை அளவுள்ள விநாயகர் சிலைகள், 50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப் படுகின்றன. நாங்கள் ஸ்ரீரங்கத்தில் இச்சிலைகளை ஆர்டர் செய்து வாங்கி வருகிறோம். நாளை முதல் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கி÷ றாம். களிமண்ணில் செய்யப்பட்ட சிலைகள், 100 முதல் 200 ரூபாய் வரை வாங்கலாம். களிமண் சிலைகளை நாங்களே தயாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.