மஞ்சகம்பை கோவிலில் அமாவாசை பூஜை
ADDED :3682 days ago
மஞ்சூர் : மஞ்சகம்பை கோவி லில் நடந்த அமாவாசை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஞ்சூர் அடுத்துள்ள மஞ்சகம்பை மானிஹாடா எத்தையம்மன் சத்திய நாகராஜர் கோவிலில் மாதந்தோறும்அமாவாசை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. இந்த பூஜையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலை யில், அங்கு நடந்த அமாவாசை பூஜையில், சத்திய நாகராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.