உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா நிறைவு

சிவகங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா நிறைவு

நகரி: புதுப்பேட்டையில் சிவகங்கையம்மன் கோவிலின், 64வது ஜாத்திரை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. சித்துார்  மாவட்டம், நகரி அடுத்த  புதுப்பேட்டை சிவகங்கை யம்மன் கோவிலின், 64வது  ஆண்டு ஜாத்திரை விழா கடந்த, 30 ம் தேதி துவங்கியது. தினமும் மூலவர்  அம்மனுக்கு சிற ப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இரவு கும்பம்  கொட்டும் நிகழ்ச்சியும், பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும்  நடந்தது.  நிறைவு  நாளான நேற்று காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்,  மாலையில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து  வழிபட்டனர்.  இரவு உற்சவர்கள் சிவகங்கையம்மன், பவானியம்மன், எல்லையம்மன்  மற்றும்ஓர்குண்டாலம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா  வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடந்தது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !