திருப்பதி பெருமாளை பாட மறுத்தவர்!
ADDED :3483 days ago
திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட போது அரசுப்பணியில் இருந்தவர் அழகிய மணவாளதாசர். இவருக்கு பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பக்தரான இவர், ஸ்ரீரங்கம் தவிர்த்த வேறெந்த தலத்து பெருமாளையும் வணங்குவதில்லை என்ற விரதம் மேற்கொண்டிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு சந்தர்ப்பத்தில், அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை (வெங்கடாஜலபதி) பாடமாட்டேன் என்று கூறினார். இந்தச் சூழ்நிலையில், மணவாளதாசருக்கு கண்டமாலை என்னும் நோய் ஏற்பட்டது. மனம் வருந்தி ஏழுமலையானின் திருவடியைச் சரணடைய அவரது நோய் மறைந்தது. அதன் பின்னரே இவர் திருப்பதி பெருமாள் மீது திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை ஆகியவற்றைப் பாடினார்.