செப்., 12ல் சபரிமலை நடை திறப்பு
ADDED :3349 days ago
சபரிமலை: திருவோணம் பண்டிகை, வரும், 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை நடை, 12-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று, வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள், அதிகாலை மேல்சாந்தி சங்கரன்நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகங்கள் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். 14ல், திருவோண நாளில், ஐயப்பனுக்கு மஞ்சள் முண்டு அணிவித்து பூஜைகள் நடக்கும். அன்று மதியம், பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்படும். 16 வரை, ஓணத்தை ஒட்டிய பூஜைகள் நடக்கும். வரும், 17 முதல், 21 வரை, புரட்டாசி மாத பூஜைகள் நடக்கின்றன. ஒன்பது நாட்களிலும் தினமும் இரவு, 7:00 மணிக்கு, படி பூஜை நடக்கும்.