மஹாளய அமாவாசை பண்ணாரில் கடும் கூட்டம்
ADDED :5197 days ago
சத்தியமங்கலம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை 6 மணி பூஜைக்கே பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். மதியம் உச்சிகால பூஜை நேரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோவில், வேணுகோபால் ஸ்வாமி கோவில், தவளகிரி தண்டாயுதபாணி கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.