கஜமுகனுக்கு யானைகள் பூஜை
ADDED :3351 days ago
கூடலுார்: -முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், நேற்று மாலை, 5:30 மணிக்கு விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு, அலங்கரிக்கப்பட்ட வளர்ப்பு யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டன. கிருஷ்ணா, பாரதி ஆகிய இரு வளர்ப்பு யானைகள், கோவில் மணி அடித்தும், கோவிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கின. பிற வளர்ப்பு யானைகள், தும்பிக்கையை துாக்கி பிளிறியபடி, விநாயகரை வணங்கின. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடனம் நடந்தது. அனைத்து யானைகளுக்கும், சிறப்பு உணவு வழங்கப்பட்டது.