உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் சம்மந்த விநாயகருக்கு தங்ககவசம்

அருணாசலேஸ்வரர் கோவில் சம்மந்த விநாயகருக்கு தங்ககவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சம்மந்த விநாயகருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆணை திறை கொண்ட விநாயகர் சன்னதியில் கோவில் யானைருக்கு மண்டியிட்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபட்டது. மேலும், சம்மந்த விநாயகருக்கு தங்க கவசம் சாத்தி வழிபாடு நடந்தது. இதேபோல், இரட்டை பிள்ளையார் கோவில் விநாயகருக்கு, தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடத்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வீடுகளில் விநாயகரை வைத்து வழிபட அதிகாலை முதலே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆர்வமுடன் பஜார் வீதிக்கு வந்து சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர். மாவட்டத்தில், 2,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்து முன்னணி சார்பில், 1,200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க போலீசார் அறிவுறுத்தினாலும், இளைஞர்கள், 15 அடி உயர சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !