காஞ்சிக்கோவிலில் சிலைகள் ஊர்வலம்
ADDED :3353 days ago
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவிலில், விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் காஞ்சிக்கோவிலில், நான்கு சிலைகள் அமைக்கப்பட்டன. நேற்று காலையில் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை, 4 மணியளவில், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. இதில், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், பவானி அருகே உள்ள வைரமங்கலத்தில், பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.