உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ முத்துகுமாரசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

செல்வ முத்துகுமாரசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளாபாளையம் பாப்பாத்தி அம்மன் செல்வ முத்துகுமாரசுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணாயபுரம் யூனியன், பிள்ளாபளையம் பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் செல்வ முத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு, கடந்த, 4ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, நேற்று காலை, 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை செய்யப்பட்டு, யாகசாலை பிரவேசம், விநாயகர் வழிபாடு, மகாபூர்ணாகுதி நடத்தப்பட்டது. பின், காலை, 9 மணி அளவில் கடம் புறப்பாடு செய்யப்பட்டு, முத்துகுமாரசுவாமி கோவில் கலசத்துக்கு, சுவாமிநாத சிவச்சாரியர் தலைமையில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் வழிப்பாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !