உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திண்டிவனம்: தாதாபுரம் கரிவரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் வட்டம், தாதாபுரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக்கோவில், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை ௭:௩௦ மணியளவில், கும்பாபிஷேக விழா நடந்தது. மணிவண்ண பட்டாச்சாரியார் விழாவை நடத்தி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக, சட்டத்துறை அமைச்சர் சண்முகம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆரணி எம்.பி., ஏழுமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர். வல்லம் ஒன்றிய முன்னாள் சேர்மன் அண்ணாதுரை, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி முருகன், தாதாபுரம் ஊராட்சி தலைவர் ஜீவா, துணைத்தலைவர் கல்பனா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !