வெள்ளி அலங்காரத்தில் சித்தி விநாயகர் தரிசனம்
ADDED :3655 days ago
செவ்வாய்பேட்டை: சதுர்த்தி விழாவான நேற்று, சித்தி விநாயகர், வெள்ளி கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். சேலம், செவ்வாய்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில், கடந்த, 31ல், முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன், சதுர்த்தி விழா துவங்கியது. நேற்று காலை, 7 மணிக்கு, கணபதி ?ஹாமம், 9 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. மதியம், 12 மணிக்கு, வெள்ளி கவசம் சாத்துபடி செய்து, சித்தி விநாயகர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், இன்று லட்சுமி கணபதியாகவும், நாளை, விக்னேஸ்வரி கணபதியாகவும், 8ம் தேதி சிவகணபதியாகவும், சித்தி விநாயகர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.