உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் விண்ணை பிளந்த கணேச கோஷம்!

நீலகிரியில் விண்ணை பிளந்த கணேச கோஷம்!

ஊட்டி: நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமர்க்களமாக நடந்தது. ஊட்டியில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில், தேவாங்கர் மண்டபத்தில் துவங்கிய ஊர்வலத்தை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மஞ்சுநாத் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மாநில மக்கள் தொடர்பு அமைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஊர்வலமானது, சேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை, புளுமவுன்டன் சாலை, மாரியம்மன் கோவில், மெயின் பஜார், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்றது. அங்கிருந்து, காமராஜர் சாகர் அணைக்கு அனுப்பப்பட்டு, 130க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தில், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க, 130 வாகனங்களில், 1,300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஊட்டி பாம்பே கேசில் பகுதி இந்துமுன்னணி நிர்வாகிகள்,  108 கிலோ எடைக்கொண்ட ‘மெகா’ லட்டை தயாரித்து, வீதியில் வரும் பக்தர்களுக்கு வழங்கினர். ஊர்வலம் நடந்த இரண்டு மணிநேரம்,‘ஜெய்காளி; ஓம்காளி’; ‘கணேசா’ கோஷங்கள் விண்ணை பிளந்தது.

* கோத்தகிரியில், மதியம், 3:30 மணியளவில், அனுமன் சேனா சார்பில், துவங்கிய ஊர்வலத்தை அகில பாரத அனுமன் சேனா நிறுவன தலைவர் ஸ்ரீதர்ஜி துவக்கி வைத்தார். விழா கமிட்டி தலைவர் மோகன்ராஜ் தலைமையில், 29 சிலைகள், கோத்தகிரி டானிங்டனில் இருந்து, பஸ் ஸ்டாண்டு, பஜார், காம்பாய் கடை, பழைய காவல்நிலைய சாலை, ராம்சந்த் வழியாக சென்று, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில், ‘ஓம் காளி; ஜெய்காளி; இந்து தர்மம் ஓங்கட்டும்’ என கோஷம் எழுப்பப்பட்டது.

* குன்னுார் பகுதியில், இந்துமுன்னணி சார்பில், 58 இடங்களில், 108 சிலைகள் வைக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட சிலைகள், மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், நேற்று மதியம், 3:45 மணியளவில், சிம்ஸ்பூங்காவில் இருந்து, பெட்போர்டு, மவுன்ட்ரோடு, பஸ் ஸ்டாண்டு மற்றும் காந்திபுரம் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, லாஸ் நீர் வீழ்ச்சியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

11ம் தேதி விசர்ஜன விபரம்:
* கூடலுாரில் இந்து முன்னணி சார்பில், காலை, 11:00 மணியளவில் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலிலும், மதியம், 1:00 மணிக்கு, பா.ஜ., சார்பில், நகராட்சி அலுவலகத்திலும் துவங்கும் ஊர்வலங்கள், ராஜ கோபாலபுரம், வண்டிபேட், சுங்கம், காவல் நிலைய சாலை, செம்பாலா வரை சென்று, குனியல் ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும்.

* மதியம், 2:00 மணிக்கு, நடுவட்டத்தில் வி.எச்.பி., சார்பில், நடுவட்டம் பஜார் வரை செல்லும் ஊர்வலத்தின் முடிவில், டி.ஆர்.பஜார் அணையில் சிலைகள் கரைக்கப்படும்.

* மதியம், 3:00 மணிக்கு, மசினகுடியில், பொதுமக்கள் சார்பில் நடக்கும் ஊர்வலம், வாழைத்தோட்டம், மாவனல்லா, மசினகுடி பஜார், பஸ் ஸ்டாண்டு வரை சென்று, மரவகண்டி அணையில் சிலைகள் கரைக்கப்படும்.

* தேவாலாவில், மதியம், 12:00 மணிக்கு, இந்து முன்னணி, 2:00 மணிக்கு வி.எச்.பி., சார்பில், மட்டத்துபாடி மாரியம்மன் கோவிலில் துவங்கும் ஊர்வலங்கள், ரிச்மண்ட் வரை சென்று, பொன்னானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !