திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :3653 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சணம், பால், தயிர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.