தியாகராஜபுரம் கோவிலில் ஸம்வத்சரா அபிஷேக தினம்
ADDED :3345 days ago
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரத்தில் 10ம் ஆண்டு ஸம்வத்ஸரா அபிஷேக தினம் நடந்தது. தியாகராஜபுரம் லஷ்மி நாராயணபெருமாள் கோவிலில் நடந்த விழாவில், விஸ்வநாத சாஸ்திரி, ராஜகோபால சாஸ்திரி, பாலகிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட வேத விற்பன்னர்கள் முன்னிலையில் மகன்யாச, ஏகாதச ருத்ர ஜெபம் நடந்தது. பின்னர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் மல்லிகார்ஜீணன், ராஜப்பா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வைத்தியநாதன் செய்திருந்தார்.