உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளை விநாயகர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் விழா

வெள்ளை விநாயகர் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் விழா

ஆத்தூர்: ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், பழமை வாய்ந்த வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், வெள்ளை விநாயகர், பாலசுப்ரமணி, சிவன் மற்றும் நவக்கிரக கோவில்கள் தனித்தனியாக உள்ளன. சங்கடஹர சதுர்த்தி விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில், கோவில் முன்புற வளாகத்தில், 15 லட்சம் ரூபாய் செலவில், கோவிலுக்கான மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நேற்று, அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்கடஹர சதுர்த்தி விழா குழுவினர், அறநிலையத்துறை அலுவலர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !