பெரியகுளத்தில் ராதா அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :3333 days ago
பெரியகுளம்: பெரியகுளத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் சார்பில் ராதா அஷ்டமியை முன்னிட்டு 1,008 துளசி செடிகளுக்கு பூஜை நடந்தது.
லட்சுமிபுரம் ரேணுகா வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் லதா, செயலர் விஜயராணி, பக்தர்கள் ஏராளமானோர் இந்த பூஜை செய்தனர். அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஹரே ராம மகாமந்திர கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள்,பக்தர்கள் செய்தனர்.-