உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூரில் 13.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

ஓசூரில் 13.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரியில், 13.5 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி கோட்டை தெருவில், ஐயப்பன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில், சூளகிரி ஐயப்பா தர்ம சாஸ்தா சேவா சங்கம் மற்றும் சூளகிரி பொதுமக்கள் சார்பில், 13.5 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை, (செப்., 9ம் தேதி) முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், சிவாரிபட்டணம் நகரில், பசவாச்சாரி சிற்பி குழுவினரால், ஐந்து மாதவேலைப் பாடுகளுக்கு இடையே, ஒரே கல்லில், 2.5 டன் எடை கொண்ட சிலை உருவாக்கப்பட்டது. சூளகிரி பகுதி பக்தர்கள், கோவிலில் திரண்டு, சிறப்பு பூஜைகள் செய்து, ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !