பூண்டி மகான் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ADDED :3331 days ago
திருவண்ணாமலை: செப். 10 திருவண்ணாமலை அருகே, பூண்டி மகான் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில், 1951 முதல் 1978ம் ஆண்டு வரை, செய்யாறு ஆற்றங்கரையோரம் அமர்ந்து, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பல அற்புதங்களை நிகழ்த்தி வந்தார். 1978ம் ஆண்டு, ஜீவ சமாதியில் முக்தி நிலை அடைந்தார். அவருடைய ஜீவசமாதி மேல் கற்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தினமும் வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், இவை புனரமைக்கப்பட்டு இதற்கான கும்பாபிேஷகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தன. செய்யாற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, பூண்டி மகானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.