ஊட்டி ஜெயின் கோவிலில் அன்னதான திட்டம்
ADDED :3328 days ago
ஊட்டி: ஊட்டியில் பகவான் மகாவீரர் ஜெயின் அமைப்பு சார்பில், அன்னதான திட்டம் துவக்கப்பட்டது.
ஊட்டி மெயின்பஜாரில் உள்ள, பகவான் மகாவீரர் ஜெயின் அமைப்பின் சார்பில், ஏழை மக்களுக்கான மருத்துவம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், (செப்., 9ம் தேதி) முதல், அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை, ஜெயின் சாத்விஜிகளான, ஸ்ரீரிசய்யம்பூர்ணாஜி மற்றும் அவர்களின் சீடர்கள் பூஜை செய்து துவக்கி
வைத்தனர். இதில், 500 பேர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறுகையில்: "எங்கள் அமைப்பின் சார்பில், மருத்துவ திட்டம் நடந்து வருகிறது. தற்போது துவங்கி உள்ள அன்னதான திட்டம், ஒவ்வொரு மாதமும், இரண்டாம் வெள்ளி கிழமை நாட்களில் நடக்கும். இதில், அனைவரும் பங்கேற்கலாம். மேலும், கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என்றனர்.