ராசிபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3328 days ago
ராசிபுரம்: அத்திப்பலகனுார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் (செப்., 11ம் தேதி) நடக்கிறது.
ராசிபுரம் அடுத்த, அத்திப்பலகானுாரில் உள்ள, விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா (செப்., 11ம் தேதி) நடக்கிறது. இரண்டாம் கால வேள்வியுடன், திரவிய ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையுடன் யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு மேல், 6:30 மணிக்குள், விமான கோபுரத்துடன், விநாயகர், மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.