உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம்

செஞ்சியில் விநாயகர் சிலை ஊர்வலம்

செஞ்சி: செஞ்சியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செஞ்சி சத்திர தெருவில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் துவங்கியது.

 இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணி தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர்கள் சங்கர், பாலு, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கோட்ட அமைப்பு செயலாளர் ரமேஷ், தெய்வீக மக்கள் இயக்கம் ராஜாதேசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை 5:00 மணிக்கு, செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்தது. அங்கு, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம் சிறப்புரை நிகழ்த்தினார். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் 200 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !