உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜப் பெருமாள் கோவிலில் 1008 சகஸ்கர நாம அர்ச்சனை

வரதராஜப் பெருமாள் கோவிலில் 1008 சகஸ்கர நாம அர்ச்சனை

பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் முன்னிட்டு இன்று மாலை 1008 சகஸ்ரநாம அர்ச்சனை  நடக்கிறது. பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நேற்றுமுன்தினம் மாலை திருபவித்ர உற்சவம் மாலை 5:30 மணிக்கு அனுமதி  பெறுதல், புற்றுமண் பூஜை, விதையிடு விழா, யாக குண்டங்கள் , கலச பூஜை, பவித்ர மாலைகளுக்கு பிரதிஷ்டை சயனாதிவாசம்  நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பவித்ர மாலைகள் அனைத்து  மூர்த்திகளுக்கு சாற்றி இரண்டாம் காய யாக பூஜை நடந்தது. உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு சிறப்பு  அலங்காரத்தில் அருள்பாலித்தார்.   இன்று 12 ம் தேதி  காலை 9:00 மணிக்கு  உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, பெருந்தேவி  தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், யாகவேள்விகள், மகாசாந்தி கலச திருமஞ்சனம், கும்பபிரதிஷ்டை  நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு  1008 தாமரை மலர்களால் தாயாருக்கு சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனையும், பெருமாளுக்கு துளசி அர்ச்சனையும், இரவு 8:00 மணிக்கு மகா  தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !