சந்தானகோபாலகிருஷ்ணன் சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3323 days ago
சோழவந்தான்: சோழவந்தான் இரட்டை அக்ரஹாரம் ராதாகிருஷ்ணபக்த மகளிர் சபா சார்பில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சோழவந்தான் சந்தானகோபாலகிருஷ்ணன் சுவாமி கோயிலில் ஆவணி உற்சவம் நடந்தது. ஹரேராமா ஹரே கிருஷ்ணாநாம கீர்த்தனைகளுடன் பக்தி பாராயணம் பஜனை தொடங்கியது. பேராசிரியை மீனாட்சி பட்டாபிராமன் கண்ணன் என் காதல் பற்றிய பக்தி சொற்பொழிவு செய்தார். சோமநாராயணபாகவதர் முன்னிலையில் மகளிர்குழுவினர் பாட்டுடன் சத்யபாமா, ருக்மணி கிருஷ்ணன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. எம்விஎம்., குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை மகளிர்குழுதலைவர் சேதுபாய், செயலாளர்கள் பாமா, கண்ணம்மா, பொருளாளர் தலைமைஆசிரியர் பாலசுப்பிரமணியம் மற்றும் விழாகமிட்டியினர் செய்திருந்தனர்.