உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பிட்டுத்திருவிழா

சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் பிட்டுத்திருவிழா

சென்னிமலை: சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், பிட்டுத்திருவிழா கொண்டாடப்பட்டது. மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சுந்தரேச பெருமான், மூதாட்டி ஒருவருக்கு உதவியாக, பிட்டு உணவைக் கூலியாகப் பெற்றுக் கொண்டு, வைகைக் கரையை அடைத்தார் என்பது புராணம். பிட்டுக்கு இறைவன் மண் சுமந்த, ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், பிட்டுத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, நேற்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், பிட்டுத்திருவிழா கொண்டாடப்பட்டது. காலை, 7:00 மணிக்கு கைலாசநாதருக்கு பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களைக் கொண்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவுக்காக சென்னிமலை பார்க் சாலையில், வைகைக் கரை அமைக்கப்பட்டிருந்தது. மாலை, 4:00 மணிக்கு, வைகைக் கரைக்கு, கைலாசநாதர் அலர்மேல்மங்கை மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் சப்பரத்தில் எழுந்தருளினர். சென்னிமலை கோவில் தலைமை குருக்கள் ரமேஷ் தலைமையில், அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !