உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

குணசீலம் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருச்சி: குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில், பிரசித்திப்பெற்ற பிரம்மோற்சவ விழா இன்று (29ம் தேதி) துவங்குகிறது. தமிழகத்தில் தென் திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் இவ்விழா, இன்று (29ம் தேதி) காலை 9.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு ஏழு மணிக்கு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருள்கிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், அக்., 7ம் தேதி நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு, பெருமாள் உபயநாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்., 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூலவர் பெருமாள் முத்தங்கி அலங்காரத்திலும், மற்ற நாட்களில் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !