முத்துமாரியம்மன் கோவிலில் விடையாற்றி விழா கோலாகலம்
ADDED :5204 days ago
கந்தர்வகோட்டை: கந்தர்வக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் விடையாற்றி திருவிழா சிறப்பாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு விழாவான விடையாற்றி திருவிழாவின் நிறைவு விழாவான விடையாற்றி திருவிழா கந்தர்வகோட்டை வாணிய செட்டியார்கள் ஆண்டுதோறும் நடைபெறும். வழக்கம் இந்தாண்டும் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம், அன்ன அபிஷேகங்கள் நடந்தது. மதியம் கோயில் வளாகத்தில் அன்னதானமும், இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் மலர் அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. விழா ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை வாணிய செட்டியார்கள் செய்திருந்தனர்.