உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா!

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா!

அவலுார்பேட்டை: வடுகப்பூண்டியில் வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா வடுகப்பூண்டி கிராமத்தில் ஸ்ரீதேவி,பூமி தேவி சமேத வெங்கசே பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மகாகும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு 13 ம்தேதி மாலை 5 மணிக்கு யஜமாநசங்கல்பம் ஆச்சார்யா வர்ணம் பகவர் பிரார்த்தனை பின்னர் புண்யாஹம், மிருத்வங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ஆதிவாசத்ரய திருமஞ்சனம், பூர்ணாஹூதி சாற்று முறையும் நடந்தது.  காலை புன்னியாஹம், அக்னிஆராதனம், ததுக்த ேஹாமங்கள் மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானமும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !