கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதிப்பின்றி போராட்டம்: சங்க நிர்வாகி பேட்டி
ADDED :3314 days ago
திருவண்ணாமலை: ""பவுர்ணமி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதிப்பில்லாமல், கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும், என, தாலுகா வியாபாரிகள் சங்க செயலாளர் முரளிதரன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: காவிரி பிரச்னையில், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட, மத்திய அரசை வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. இதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், போராட்டம் நடத்தப்படும் இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்க உள்ளதால், வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.