திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
ADDED :3388 days ago
திருவேடகம், திருவேடகம் ஏலவார்குழலியம்மன், ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.ஆவணி உற்சவத்தில் பவுர்ணமி அன்று, இங்குள்ள வைகை ஆற்றில் ஏடு எதிரேறிய திருவிழா நடக்கும். நேற்று இரவு 8 மணிக்கு வாதுவென்ற விநாயகர், திருஞானசம்பந்தர், அமைச்சர் குலச்சிறைநாயனார் பவனி வந்து வைகையில் எழுந்தருளினர்.விழாவின் வரலாறு குறித்து சண்முக தேசிகர் விளக்கினார். இரவு வைகை ஆற்றில் தங்க ஏட்டினை திருஞானசம்பந்தர் கையில் வைத்து எதிரேறும் நிகழ்ச்சி நடந்தது. நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள், விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.