ராமர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3320 days ago
ஆர்.கே.பேட்டை: சீதா, லட்சுமணர் உடனுறை ராமச்சந்திர மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த செட்டிவாரிபள்ளி, பரபயங்கராபுரம் கிராமத்தில் சீதா, லட்சுமணர் உடனுறை ராமச்சந்திரமூர்த்தி கோவில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் பெருமான், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினார்.