ராமேஸ்வரத்தில் பக்தர்கள் டிரை சைக்கிளில் சவாரி!
ADDED :3388 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வாடகை வாகனங்கள் ஓடாததால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் டிரை சைக்கிள்களில் கோவிலுக்கு சென்றனர். ராமேஸ்வரத்தில், நேற்று ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் ஓடவில்லை. இதனால், ராமேஸ்வரம் கோவிலுக்கு ரயில்களில் வந்த வட மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேறுவழியின்றி டிரை சைக்கிள்களை வாடகைக்கு அமர்த்தி அதில் பயணித்தனர். இதற்கு, 50 ரூபாய் வீதம் டிரை சைக்கிள் தொழிலாளிகள் கட்டணம் வசூலித்தனர்.