உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கரூர்: அரவக்குறிச்சி அருகே, வரதராஜ பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொக்குப்பட்டிபுதூரில், வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்புக்கு பின், நேற்று முன்தினம் அதிகாலை, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தசதானம், தசதரிசனம் நிகழ்ச்சிக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !