உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா

கிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு  பூஜை நடந்தது.  இக்கோவிலில், இவ்விழாவையொட்டி, பால், பன்னீர், இளநீர், தேன், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், அரிசிமாவு, சந்தனம்  போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், பெருமாளுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், சொலவம்பாளையம்  மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !