முக்தீஸ்வரர் கோயில் கர்ப்பக்கிரகத்தில் சூரியகதிர்கள்: பக்தர்கள் பரவசம்!
ADDED :3308 days ago
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் வழியே ஊடுருவும் நிகழ்வு நடைபெற்றது. மார்ச், செப்டம்பரில் சில நாட்கள் மட்டும் இந்த அரிய நிகழ்வு நடக்கும். கோயிலில் செப்.,19 முதல் 30 வரை கருவறையில் சூரிய ஒளி பிரவேசிக்கிறது. தினமும் காலை 6:15 மணி முதல் 6:25 மணி வரையும், காலை 6:40 மணி முதல் 6:50 மணி வரையும் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதி மண்டபம் துவாரம் வழியாக கருவறைக்குள் சுவாமி மீது பிரவேசிக்கும். இன்று மண்டபத்தை தொட்டபடி உதித்த சூரிய பகவான் நந்தியை கடந்து பிரவேசித்தார்.இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.